காஞ்சிபுரத்தில் ஒன்றரை வயது குழந்தையின் தலையில் சிக்கிக்கொண்ட சாதம் வடிக்கும் பாத்திரத்தை, அரசு மருத்துவமனை மருத்துவர்களும், செவிலியர்களும் லாவகமாக வெட்டி எடுத்துள்ளனர்.
குழந்தையுடன் அழுதபடி வந்த பெற்றோரை மருத்துவர்கள் சமாதானப்படுத்தி, குழந்தையின் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்தை லாவகமாக எடுக்க முயன்றனர்.
ஆனால் பாத்திரத்தை எடுக்க முடியாததால் குழந்தையிடம் அன்பாக பேசி பாத்திரத்தை வெட்டி எடுத்தனர். இதனால் மகிழ்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையுடன் அங்கிருந்து சென்றனர்.