ராமநாதபுரம் அருகே போதைப்பொருள் கடத்தி சென்ற இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரை சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் 12 கோடி ரூபாய் மதிப்பிலான சாரஸ் போதைப்பொருளின் மூலப்பொருளை கடத்தி சென்றது தெரிய வந்தது.
தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் பிரப்பன் வலசை பகுதியில் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வெளிநாட்டு சிகரெட் பண்டல்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.