புதுக்கோட்டை அருகே மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாளர் தரக்குறைவாக பேசுவதாக கூறி மகளிர் சுய உதவிக்குழுவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பொன்னமராவதியில் கூட்டுறவுத்துறை சார்பில் மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மூலம் ஆலவயல் கிராமத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுவிற்கு தலா ஐம்பதாயிரம் என 6 பேருக்கு தொழிற் கடன் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் மேலாளர் ஜெயந்தி அந்த பணத்தை விடுவிக்காமல் மகளிர் சுய உதவிக் குழுவினர்களிடம் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.