உதகை அருகே வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை தீயணைப்புத் துறையினர் பலமணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் சுமார் 55 சதவீதம் வனப்பகுதி உள்ள நிலையில், உறைபனி காரணமாக அங்குள்ள செடி, கொடிகள் காய்ந்து கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று உதகை மார்லிமந்து அணை அருகேயுள்ள வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்தது.
காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் காட்டுத்தீ மளமளவென பரவத்தொடங்கிய நிலையில், தகவலறிந்து சம்பவ இடம் வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர், பல மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.