கும்ப மேளாவில் இதுவரை 55 கோடியே 56 லட்சம் பக்தர்கள் பங்கேற்றுள்ளதாக
உத்தரபிரதேசம் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை தகவல் தெரிவித்துள்ளது.
பிரயாக்ராஜில் மகா கும்பமேளா விழா கடந்த மாதம் 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 26 ஆம் தேதி மகா சிவராத்திரியன்று மகா கும்பமேளா நிறைவு பெறுகிறது.
இதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இதுவரை 55 கோடியே 56 லட்சம் பக்தர்கள் பங்கேற்று புனித நீராடியுள்ளதாக அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.