ராஜஸ்தான் சட்டப் பேரவையில் துணை முதலமைச்சர் தியா குமாரி பட்ஜெட் தாக்கல் செய்தார். ராஜஸ்தான் சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் சபாநாயகர் வாசுதேவ் தேவ்னானி முன்னிலையில், துணை முதலமைச்சர் தியா குமாரி பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது வரும் நிதியாண்டில் மாநில உள்நாட்டு உற்பத்தி 19 லட்சத்து 89 ஆயிரம் கோடியை எட்டும் என நம்பிக்கை தெரிவித்தார்.