உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள ராமர் கோயிலின் மீது பறந்த டிரோன் கேமராவை காவல்துறையினர் சுட்டு வீழ்த்திய நிலையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அயோத்தியிலுள்ள ராமர் கோயிலின் மீது டிரோன்கள் பறக்கவிடுவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது இந்த நிலையில், நேற்று ட்ரோன் கேமரா பறக்கவிடப்பட்ட நிலையில், அது சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து ராமர் ஜென்ம பூமி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்ட நிலையில், போலீசார் இன்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.