ராஜஸ்தானில் பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தேசிய பளுதூக்கும் வீராங்கனை பரிதாபமாக உயிரிழந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் மாவட்டத்தை சேர்ந்த தேசிய பளுதூக்கும் வீராங்கனை யஸ்திகா ஆச்சார்யா. 17 வயதாகும் இவர், பவர் லிஃப்டிங் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இந்நிலையில், உடற்பயிற்சி கூடத்தில் பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபட்டபோது தடுமாற்றம் ஏற்பட்டு, 270 கிலோ எடையுடன் கூடிய இரும்பு கம்பி யஸ்திகாவின் கழுத்தின் பின்புறம் விழுந்தது. இதனால் மயங்கி விழுந்த அவர், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இரும்பு கம்பி விழுந்ததில் பயிற்சியாளருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.