மதுரை திருமங்கலம் அரசு மருத்துவமனையில் விபத்து காயத்துக்கான அவசர சிகிச்சை பிரிவு இல்லாததால், கடந்த இரண்டரை ஆண்டில் 1,370 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது ஆர்.டி.ஐ. மூலம் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் சாலை விபத்துகளில் காயமடைபவர்களுக்கு தரமான அதிநவீன சிகிச்சை அளிப்பதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு முதற்கட்டமாக 20 மருத்துவமனைகளில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் கொண்டு வரப்பட்டது.
இருப்பினும், திருமங்கலம் அரசு மருத்துவமனையில் இத்திட்டம் செயல்படுத்தப்படமால் கிடப்பில் போடப்பட்டது.
இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் ஆர்டிஐ-யில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், மதுரை திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு வசதி இல்லாததால் 1,370 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது தெரியவந்தது.