தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயமல்ல என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய முன்னாள் உறுப்பினர் பாலகுருசாமி விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய கல்விக் கொள்கை அரசியல் சட்டத்தில் அட்டவணை இடப்பட்டுள்ள ஏதாவது ஒரு இந்திய மொழியை மூன்றாவது மொழியாகக் கற்பிக்க பரிந்துரை செய்வதாகவும், எந்தக் கட்டத்திலும் ஹிந்தி திணிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் மூன்றாவது மொழியாக தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மாணவர்கள் கற்க தமிழக அரசு பரிந்துரை செய்யலாம் என்று கூறிய பாலகுருசாமி, தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசுவோருக்கு தேசிய கல்விக் கொள்கை அவர்களது தாய்மொழிகளைக் கற்க வழிவகை செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.