இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தொழில் தொடங்க முடிவு செய்தது ஏற்க முடியாதது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லி மற்றும் மும்பையில் இரண்டு டெஸ்லா கிளைகளை நிறுவி, மின்சார வாகனங்களை தயாரிக்க அதன் நிறுவனர் எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். இதையொட்டி, 13 பணியிடங்களை உருவாக்கி அதற்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படுவதாக கூறி, எலான் மஸ்கின் முடிவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.
அதிகப்படியான இறக்குமதி வரி வரிவிதிக்கப்படும் இந்தியாவில் தொழில் தொடங்குவது அமெரிக்காவுக்கு அநீதி இழைப்பதாக அர்த்தமாகிவிடும் என்றும், தெற்காசியாவில் கார் விற்பனை செய்வது எளிதானது அல்ல என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.