பெரம்பலூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து டயர் வெடித்து தீப்பற்றியது.
சென்னையிலிருந்து தென்காசி மாவட்டம் பாபநாசம் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து பெரம்பலூர் அருகே சின்னாறு பகுதியில், அதிகாலை இரண்டு மணி அளவில் சென்றபோது பின்பக்க டயர் வெடித்து நெருப்பு பரவத் தொடங்கியது.
இதையறிந்த ஓட்டுநர், சாலையோரம் பேருந்தை நிறுத்தியதும் பயணிகள் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கினர். பேருந்து முழுவதும் தீப்பற்றிய நிலையில், தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.