தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது சந்தர்ப்பவாத அரசியல் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இந்தி எதிர்ப்பில் காட்டும் அக்கறையை தமிழ்மொழி வளர்ச்சியில் தமிழக அரசு காட்டாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தாய்மொழி தான் பயிற்று மொழி என தெரிவித்துள்ள ராமதாஸ்,தமிழகத்தில் மட்டும் தான் தமிழைப் படிக்காமலும், தமிழில் படிக்காமலும் பட்டம் பெற முடியும் என்ற அவல நிலை நிலவுவதாக வேதனை தெரிவித்துள்ளார்
இந்த நிலையை மாற்ற திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ள ராமதாஸ், மும்மொழிக் கொள்கையை மட்டும் எதிர்ப்பது சந்தர்ப்பவாத அரசியல் என குற்றம் சாட்டியுள்ளார்.