உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே மாதம் நடைபெறும் மலர் கண்காட்சிக்காக பசுமை குடில்களில் மலர் விதை தூவும் பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில் இந்த ஆண்டு நடைபெறும் மலர் கண்காட்சிக்காக பசுமை குடில்களில் மலர் விதை தூவும் பணிகளில் ஊழியர்கள் தீவரமாக ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அவர்கள் டேலியா, சால்வியா, பிரெஞ்சு மேரி கோல்ட், பிக்கோனியா, கிரை சாந்திமம் உள்ளிட்ட ஏராளமான மலர்களின் விதைகளை விதைத்து வருகின்றனர்.