உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் ஆகாஷ்வாணி நிலையத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இன்று ஆகாஷ்வாணி கோரக்பூருக்குச் சென்று அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார். நிலையத்தின் சமீபத்திய முன்னேற்றம் குறித்து விவாதித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அகில இந்திய வானொலியின் ஒரு பகுதியாக உள்ள ஆகாஷ்வாணி கோரக்பூர், பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது என்றும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.