தனியார் நர்சிங் கல்லூரிக்கு உரிமம் இல்லாததால் தாங்கள் செலுத்திய கல்வி கட்டணத்தை பெற்று தரக்கூறி ஆட்சியரிடம் மாணவிகள் மனு அளித்தனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே இராமசாமிபுரத்தில் செயல்பட்டு வந்த தனியார் நர்சிங் கல்லூரியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வந்தனர். அந்த கல்லூரிக்கு முறையான அங்கீகாரம் இல்லை என அதிகாரிகள் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டது.
இதை அடுத்து கல்லூரியின் தாளாளர் கைது செய்யப்பட்டதுடன், கல்லூரியில் படித்த மாணவிகளுக்கு அசல் சான்றிதழ் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், செலுத்திய கல்வி கட்டணத்தை திருப்பி வழங்காத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை சந்தித்து மாணவிகள் மனு அளித்தனர்.