விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே 3-ம் கட்ட அகழாய்வில் அகெட் எனப்படும் கல் மணி, பச்சை நிற கண்ணாடி மணி, சுடுமண் ஆட்டக்காய், சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விஜய கரிசல் குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அங்கு கல் மணி, பச்சை நிற கண்ணாடி மணி, சுடுமண் ஆட்டக்காய், சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த பொருட்கள் அங்கு தொழிற்கூடம் நடத்தி வாழ்ந்ததற்கான சான்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.