அறிவாலயத்திற்கு தமிழக மக்கள் தக்க பாடம் கற்பித்துள்ளதாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், நேற்று அறிவாலய சைபர் கூலிகளும் அவர்களின் மோசமான எஜமானர்களும் ஆயிரக்கணக்கோரை அமர்த்தி GET OUT MODI என்ற ஹேஷ்டேக்கை முயற்சித்ததாக தெரிவித்துள்ளார்.
ஆனால் அதற்கு தமிழகம் இன்று சரியான பாடம் கற்பித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். அதாவது தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவிட்ட Get Out stalin ஹேஷ்டேக்கை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுமக்களால் முதல் 3 மணி நேரத்தில் சுமார் 4.15 லட்சம் ட்வீட்கள் பதிவிடப்பட்டுள்ளதாகவும் பி.எல்.சந்தோஷ் கூறியுள்ளார்.