சேலம் அருகே மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து வீடுகளில் பள்ளி மாணவர்கள் கோலம் வரைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம், மேட்டுப்பட்டி பகுதியில் அழகேசன் என்ற பள்ளி மாணவர், தனக்கும் தனது சகோதர சகோதரிகளுக்கும் இந்தி படிக்கும் வாய்ப்பை தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அதே நேரத்தில் பல மொழிகள் படிக்கும் உரிமையை முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் தடுத்து நிறுத்துகிறார் எனவும் மாணவன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தி மொழிக்கு ஆதரவாக பள்ளி மாணவர் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதேபோல், வேலூரில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தன் வீட்டு வாசலில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து கோலமிட்டுள்ளார். அதில் தன் வீட்டு பிள்ளைகள் மும்மொழி படிக்க வேண்டும் என்றும், தமிழக அரசே தடுக்காதே என்றும் எழுதியுள்ளார்.