ஆண்டிபட்டியில் வைகை அணை பூங்காவை தனியார்மயமாக்கும் முயற்சி நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் வைகை அணை பூங்காவிற்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இங்குள்ள உல்லாச ரயிலில் பயணிக்க வெறும் 5 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் நிலையில், தனியார் சார்பில் தற்போது அமைக்கப்பட்டுள்ள ராட்டினங்களில் சுற்றி வர 80 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.
மேலும், பூங்காவில் உள்ள உல்லாச ரயில் சேவை மற்றும் படகு குழாமையும் தனியாருக்கு தாரை வார்க்க பொதுப்பணித்துறை முடிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு சுற்றுலாப் பயணிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.