திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியரிடம் சுற்றுலா தலங்கள் புதர் மண்டி கிடப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
கோட்டை குப்பம் ஊராட்சியில் உள்ள தோணிரேவு கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு கூடியிருந்த பொதுமக்கள், சுற்றுலா தலங்கள் புதர்மண்டி கிடப்பதாக குற்றம் சாட்டினர்.
இதையடுத்து கட்டடங்களை முறையாக பராமரிக்கவும், குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை செய்யவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.