திருவாடானை அருகே வீட்டின் முன்பு அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்ததில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஆக்களூர் கிராமத்தைச் சேர்ந்த ஜான்சிராணி என்பவர் அதிகாலை தனது வீட்டின் முன்பு கட்டியிருந்த பசுமாட்டினை அவிழ்க்க சென்றுள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக வீட்டின் முன்பு அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சென்ற போலீசார், பெண்ணின் சடலத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
ஆக்களூர் பகுதியில் மின்கம்பிகள் சேதமடைந்து தாழ்வாக தொங்கி கொண்டிருப்பதாகவும், இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.