தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே கூலித் தொழிலாளி சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெருப்பூர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான கோவிந்தராஜ் அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பொன்னுசாமி என்பவருடனான நிலத்தகராறு குறித்து ஏரியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற அவரை, போலீசார் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கோவிந்தராஜின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் அம்பேத்கர் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.