சென்னை, திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி, வடிவுடையம்மன் கோயிலுக்கு சொந்தமான, 4 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
மேற்கு மாட வீதியில் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள இரு கடைகள், தனி நபரால் அக்கிரமிக்கப்பட்டதாக கோயில் நிர்வாகத்தினர் அறநிலையத்துறையில் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க நடவடிக்கை மேற்கொண்ட அறநிலையத்துறை அதிகாரிகள், போலீசார் உதவியுடன் கோயில் நிலத்தில் உள்ள இரு கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர்.