கிருஷ்ணகிரியில் காவலர்களை தாக்கிவிட்டு தப்ப முயன்ற நபரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
கிருஷ்ணகிரி மலைக்கு சென்ற பெண்ணை மிரட்டி 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வழிப்பறியில் ஈடுபட்டது தொடர்பான புகாரில் 2 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக இருந்த இருவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், பொன்மலைகுட்டை பெருமாள் கோயில் பின்புறம் இரண்டு பேர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில், அந்த பகுதிக்கு சென்ற போலீசார், இருவரையும் சுற்றிவளைத்து கைது செய்ய முயன்றனர்.
அப்போது குற்றவாளிகள் கத்தியால் தாக்கியதில் இரண்டு காவலர்கள் காயமடைந்தனர். இதனால் தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் சுரேஷ் என்பரின் காலில் காயம் ஏற்பட்டது. மேலும், தப்பி செல்ல முயன்ற நாராயணன் என்பவருக்க காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார்.