வேலூர் அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட சுமார் பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்து தப்பியோடிய கடத்தல்காரர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் ஊசூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டாஸ்மாக் கடை அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த காரை போலீசார் சோதனை செய்ய வந்தபோது, காரில் இருந்த 3 பேர் தப்பியோடி விட்டனர்.
இதையடுத்து காரில் கடத்தி வரப்பட்ட சுமார் பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான 13 செம்மரக் கட்டைகள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.