இந்தியா உலக வல்லரசாக மாறி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், ஆன்மிகம் தொடர்பான மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது பேசிய பிரதமர், இந்தியர் ஒவ்வொருவரும் நாட்டின் வளர்ச்சிக்காக இரவு பகலாக உழைப்பதாக தெரிவித்தார்.
140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஒவ்வொரு துறையிலும் வலுவான தலைமை அவசியம் எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.