மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்களினால் 10 ஆண்டுகளில் மக்கள் மருத்துவத்திற்கு செலவிடப்படும் தொகை குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த சர்வதேச சுகாதார மாநாட்டில் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர்,
ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டம், உலகளவில் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு திட்டமாகும் என தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்களினால் கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் மருத்துவத்திற்கு செலவிடப்படும் தொகை,64.2 சதவீதத்தில் இருந்து 39.4 சதவீதமாக குறைந்துள்ளது எனவும் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.