கனடாவில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர்களுக்கு தலா 26 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் இருந்து டொரண்டோவிற்கு புறப்பட்டு சென்ற பயணிகள் விமானம் தரையிறங்கிய போது கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் 20 பயணிகள் காயம் அடைந்தனர். இதில் 3 பேர் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் விபத்து நடைபெற்ற விமானத்தில் இருந்த பயணிகள் அனைவருக்கும் தலா 26 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.