உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்துப்பூர்வ வாதத்தில், அரசியல் சாசனத்தின் கீழ் ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் ஒவ்வொரு முறையும் மாநில அமைச்சரவையின் ஆலோசனையின் படி செயல்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலாவதியான மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பும் போது அதன் மீது ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலத்திற்குள் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என பஞ்சாப் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தனக்கு பொருந்தாது எனவும் எழுத்துப்பூர்வ வாதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.