தமிழக அரசு பொழுதுபோக்கு வரியை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென மக்கள் நீதி மய்யத் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய கமல்ஹாசன்,
AI தொழில்நுட்பத்தை கண்டு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும், இந்திய சினிமாவில் தற்போது இருக்கக்கூடிய வியாபாரம் பாதிக்காமல், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வர வேண்டும் எனவும் கூறினார்.
மேலும் தமிழக அரசு பொழுதுபோக்கு வரியை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென துணை முதலமைச்சர் உதயநிதியை கேட்டுக்கொண்டார்.