சிறை வளாகத்திற்குள் கைதிகளுக்கு செல்போன் எப்படி கிடைக்கிறது என்பது தொடர்பாக டிஐஜி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொலை வழக்கு கைதிகள் பன்னா இஸ்மாயில் மற்றும் பிலால் மாலிக் ஆகியோர் சிறைத்துறை அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பலத்த காயமடைந்த தங்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இருவரும் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் ரமேஷ், செந்தில் குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கைதிகள் தாக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சிறைக்காவலர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் சிறைக்குள் செல்போன் எப்படி கொண்டு செல்ல முடியும் எனக் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு வழக்கை மார்ச் 10ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.