தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில், கணக்கெடுப்பிற்கான அறிவிப்பை வனத்துறை வெளியிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் 5 புலிகள் மட்டுமே உள்ளதாக நமது தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.
தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் மறுக்கப்பட்ட நிலையில், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மூலம் கிடைத்த தகவலை வைத்து செய்தி வெளியிடப்பட்டது.
இதன் எதிரொலியாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வரும் 27-ம் தொடங்கி 7 நாட்களுக்கு புலிகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.
தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியான 6 மணி நேரத்தில் வனத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.