சேலத்தில் கிராம மக்களை ஏமாற்றி இரண்டு கோடிக்கு மேல் மோசடி செய்த பெண்ணை கைது செய்ய கோரி பொதுமக்கள் எஸ்.பி. அலுவலகத்தில் புகாரளித்தனர்.
நாகியம்பட்டியை சேர்ந்த பிரேமா என்பவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒப்பந்த துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் அரசு வேலை வாங்கி தருவதாகவும், பணத்தை இரட்டிப் பாக்கி தருவதாக சீட்டு நடத்தியும் ஏராளமான மக்களிடம் சுமார் 2 கோடி ரூபாய் வரை பணம் வாங்கி மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதனையறிந்த பாதிக்கப்பட்ட மக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.