FBI-ன் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்ட காஷ் படேல், பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்றுக் கொண்டார்.
அமெரிக்காவின் FBI அமைப்பின் 9-வது இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ் படேல் நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து வாஷிங்டனில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது பகவத் கீதை மீது சத்தியம் செய்து காஷ் படேல் பதவியேற்றுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், அமெரிக்காவின் கூட்டாட்சி புலனாய்வு அமைப்பை வழிநடத்தும் முதல் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வதாகவும்,
இது வேறு எங்கும் சாத்தியப்படாது எனவும் தெரிவித்தார்.
அமெரிக்காவின் கனவு சிதைந்து விட்டதாக எவரும் எண்ண வேண்டாம் என தெரிவித்த அவர், உலகின் தலைசிறந்த புலனாய்வு அமைப்பை உருவாக்க உறுதியெடுப்பதாக கூறினார்.