சமூக சேவையில் ரோட்டரி அமைப்புகள் மிக சிறப்பாக செயல்படுகிறது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
ரோட்டரி கிளாப் ஆப் மெட்ரோ சார்பில் ‘ஸ்பிரிட் ஆப் இந்தியா அவார்ட்ஸ்’ எனும் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
ராணுவ வீரநாரி கேப்டன் ஷாலினி சிங், உலகின் இளைய மாற்றுத் திறனாளி ஸ்கை டைவர் சாம் குமார், 72 வயதில் 14 வகை கனரக வாகன உரிமங்களை பெற்ற ராதா ராணி அம்மாள், ‘ஆல் மை டி அனிமல் சாஞ்சுரி ‘ நிறுவனர் சாய் விக்னேஷ், உலகின் மிகவும் குறைவான உயரம் உள்ள மருத்துவர் கணேஷ் பாரியா ஆகியோருக்கு ‘ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் மெட்ரோ’வின் ‘ஸ்பிரிட் ஆப் இந்தியா’ விருதுகள் வழங்கப்பட்டது
இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார். மேடையில் உரையாற்றிய அவர், சமூக சேவையில் அரசாங்கத்தை விட ரோட்டரி அமைப்புகள் சிறப்பாக செயல்படுவதாக புகழாரம் சூட்டினார்.
அரசுகள் சில விஷயங்களை சிறப்பாகச் செய்யலாம், ஆனால் சமூக அமைப்புகள், குறிப்பாக ரோட்டரி, சமூக சேவையில் அரசாங்கத்தை விடச் சிறப்பாக செயல்படுகிறது.
இது பணத்தால் மட்டுமல்ல, செயல் திறன் மற்றும் அர்ப்பணிப்பு உள்ளிட்டவை காரணமாகும் என்றும் அவர் கூறினார்.