ரஷ்ய அதிபர் புதினும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியும் போர் நிறுத்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரஷியா – உக்ரைன் போரில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தத்தை காண விரும்புவதாக கூறியுள்ள அதிபர் ட்ரம்ப், ரஷியா – உக்ரைன் போர் ஒருபோதும் அமெரிக்காவை பாதிக்கப் போவதில்லை என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், உக்ரைன் போரில் அமெரிக்கா 300 பில்லியன் டாலருக்கு மேல் செலவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.