மதுரையில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் கொடுத்தால் மட்டுமே நெல்கொள்முதல் செய்யப்படுவதாக, விவசாயி ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் வாராந்திர குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்ற நிலையில், 100க்கும் மேற்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் இதில் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய விவசாயி ஒருவர், மூடைக்கு 70 ரூபாய் கொடுத்தால்தான் நெல் கொள்முதல் செய்யப்படுவதாக புகார் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.