சேலத்தில் குத்தகைக்கு விடப்பட்ட கனிம நிறுவனத்தால் தமிழக அரசுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாமாங்கம் பகுதியில் மத்திய அரசு சார்பில் இயங்கிவரும் “செயில்” நிறுவனத்திற்கு, கனிமங்களை வெட்டி எடுக்க முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி, கருப்பூர், மல்லமூப்பம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டன. இந்நிலையில், அரசு நிலத்தில் சுரங்கத்தை அமைத்துள்ள “செயில்” நிறுவனம் தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகையை செலுத்தாமல் இழுதடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
சுமார் ஆயிரத்து 152 கோடி ரூபாயை இந்நிறுவனம் தமிழக அரசுக்கு செலுத்த வேண்டியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.