ஓசூரில் உற்பத்தியாகும் ரோஜா மலர்கள் நல்ல விலைக்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஓசூரில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பசுமை குடில்கள் அமைத்து விவசாயிகள் ரோஜா சாகுபடி செய்து வருகின்றனர். சிவப்பு ரோஸ், தாஜ்மஹால் உள்ளிட்ட 22 வகையான ரோஜாக்கள் இங்கு சாகுபடி செய்யப்படும் நிலையில், இவற்றுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சிங்கப்பூர், மலேசியா மற்றும் அரபு நாடுகளுக்கு இங்கிருந்து அதிகவிலைக்கு ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.