சென்னை மெரினா கடற்கரையை தூய்மைபடுத்தும் பணியில் தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர்.
இந்த பணியை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ”நீர்மிகு பசுமையான சென்னையை நோக்கி” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த சுத்தம் செய்யும் பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அவர்கள் கடற்கரை முழுவதும் சூழ்ந்திருந்த குப்பைகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டனர்.