பழனி பேருந்து நிலையத்தில் முதலமைச்சரால் திறந்துவைக்கப்பட்ட வணிக வளாகம் இன்னும் பயன்பாட்டுக்கு வராததால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
பழனி வ.உ.சி பேருந்து நிலையத்தில் 3 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் கட்டப்பட்டது. இதை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்துவைத்த நிலையில், ஓராண்டு கடந்தும் இங்குள்ள கடைகள் அனைத்தும் பூட்டியே வைக்கப்பட்டுள்ளன.
புதிய வணிக வளாகத்தில் இன்னும் சில பணிகள் நிறைவடையாமல் உள்ளதாக கூறப்படும் நிலையில், வியாபாரிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.