புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் உள்ள நகைக்கடையில் போலி நகையை கொடுத்து தங்க நகையை எடுத்து செல்ல முயன்றவர் பிடிபட்டார்.
கந்தர்வகோட்டையில் உள்ள நகைக்கடைக்கு வந்த ஒரு பெண் உட்பட 3 பேர், போலி நகையை காட்டி அதேபோன்று தங்க நகை வேண்டுமென கேட்டுள்ளனர். பின்னர் நகை வாங்குவதுபோல நடித்து, போலி நகையை வைத்துவிட்டு தங்க நகையை எடுத்துச் செல்ல முயன்றுள்ளனர்.
உடனே, சுதாரித்துக்கொண்ட கடையின் உரிமையாளர், 3 பேரையும் பிடிக்க முயன்றார். ஆனால் பெண் உட்பட இருவர் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற நிலையில், பிடிபட்ட ஒருவரை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.