பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதற்கு தமிழக ஆட்சியாளர்கள் தலைகுனிய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறியுள்ளதாக தெரிவித்துள்ள அன்புமணி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதற்கு தமிழக ஆட்சியாளர்கள் தலைகுனிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தமிழக அரசு ஒழிக்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.