அரியலூர் மாவட்டத்தில் பெண்ணை கர்ப்பமாக்கி தலைமறைவாக இருந்த நபரை 5 வருடத்திற்கு பின் போலீசார் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம் அருகே அகரம் கிராமத்தை சேர்ந்த அசோக் குமார் என்பவர், தனது அத்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டவுடன் அவர் தலைமறைவான நிலையில், 5 ஆண்டுகளுக்கு பின் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அசோக் குமாரின் தந்தை மற்றும் சித்தப்பாவையும் போலீசார் கைது செய்தனர்.