திருச்சி மாவட்டம் திண்டுகரை பகுதியில் முதலைகள் ஒதுங்கி இருப்பதாக அந்த பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
அந்த பகுதிக்கு சென்ற வனத்துறையினர், முதலைகள் தென்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது காவிரி கரையின் மேற்பகுதியில் இருந்த முதலையை வலை வீசி பிடித்தனர். இதனால் முக்கொம்பு கரையோரம் இருக்கக்கூடிய மக்கள் குளிப்பதை தவிர்க்க வேண்டுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.