அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவர்களை நியமிக்க கூடாது என மருத்துவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவ கல்லுாரிகளில் காலியாக உள்ள, 658 சிறப்பு மருத்துவ பணியிடங்கள், நேரடி சேர்க்கை மூலம் நிரப்பப்படும் என, தமிழக அரசு தெரிவித்திருந்தது.
அரசு மருத்துவர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிறப்பு மருத்துவ பணியிடங்கள் நேரடி சேர்க்கை மூலம் நிரப்பப்பட்டால், பண பலம் படைத்தவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவர் என்றும், இதில் பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.