புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெரும்பிடுகு முத்தரையரின் ஆயிரத்து 350-ம் ஆண்டு சதய விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது .
போட்டியில், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாட்டு வண்டிகள் பங்கேற்றன. 100க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்துகொண்ட நிலையில், அவை இலக்கை நோக்கி சீறி பாய்ந்ததை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
போட்டியில் வென்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்கப் பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டன.