குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி, சென்னையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 2 முதல் 10 வயதுக்குட்பட்ட ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். வயது வாரியாக நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.