திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் நிலவும் சமூக அநீதியைப் போக்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றி பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்படுவது கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்.
மேலும், பல்கலைக்கழக ஆசிரியர்கள் 34 பேருக்கு, பேராசிரியர் நிலை வரை பதவி உயர்வு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.